Breaking News

மயிலாடுதுறையில் நரிக்குறவர் மாணவ உண்டு உறைவிட பள்ளியில் தங்கிப் பயிலும் நரிக்குறவ குத்துச்சண்டை மாணவர்கள் 20 பேருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க உதவித்தொகையை நகர் மன்ற உறுப்பினர் தனது பிறந்தநாளில் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

 


மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை கிராமத்தில் நரிக்குறவர் சமுதாய மாணவ மாணவிகள் தங்கிப் பயிலும் சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. 90-க்கு மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் நரிக்குறவ மாணவர்கள் சுமார் 20 பேர் குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மாணவர்கள் தேசிய அளவிலும் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ளனர். இவர்கள் குத்துச்சண்டை பயிற்சி பெறுவதற்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் இல்லாததால் பயிற்சி பெறுவதற்கு சிரமமாக உள்ளதாகவும் உபகரணங்கள் வாங்குவதற்காக மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர் ரஜினி என்பவர் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்லவராயன் பேட்டையில் உள்ள உண்டு உறைவிட பள்ளிக்கு சென்று பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் அதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து உதவித் தொகையை வழங்கினார். தொடர்ந்து மாணவர்கள் குத்துச் சண்டை பயிற்சி பெறுவதை அவர் பார்வையிட்டார். உதவித்தொகை வழங்கிய நகர்மன்ற உறுப்பினருக்கு மாணவர்கள் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தெரிவித்தனர்.


பாலமுருகன்

மாவட்ட செய்தியாளர் மயிலாடுதுறை.

No comments

Copying is disabled on this page!