தமிழகத்தின் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீன மடத்தில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்தில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு பட்டணப் பிரவேசத்துக்கு பயன்படுத்தும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவிகைப்பல்லக்கு மற்றும் நாற்காலி பல்லக்கு, பிரயாண பல்லக்கு, வெள்ளிப்பல்லக்கு, ஈட்டி, வாள், உள்ளிட்டவைகளுக்கு படையல் இட்டு தருமபுரம் ஆதீனகர்த்தர் சிறப்பு வழிபாடு:- வாய்ப்பாட்டு மற்றும் இசை பள்ளி மாணவர்களுக்கு அக்ஷராப்பியாசம் என்கிற ஆரம்பக்கல்வி இன்று தொடங்கியது:-
தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனத்தில் இன்று ஆயுதபூஜை விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆதீன பூஜை மடத்தில், பார்வதி, லெட்சுமி மற்றும் சரஸ்வதி உருவத்தை ஆவாகனம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, பட்டணப் பிரவேசத்துக்கு பயன்படுத்தும் சிவிகைப் பல்லக்கு, நாற்காலி பல்லக்கு, பிரயாண பல்லக்கு, வெள்ளிப்பல்லக்கு, ஈட்டி, வாள், செங்கோல் உள்ளிட்ட ஆதீனத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தபட்டுவரும் தொன்மை வாய்ந்த பொருட்களுக்கும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஏர் கலப்பை நெல் அளக்கும் கருவிகள், பழைமையான ஆதீன நூல்களுக்கும் சிறப்பு பூஜை செய்து, அம்மனுக்கு பஞ்சமுக தீபாராதனை சோடஷ தீபாராதனை செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதில், ஆதீன கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஆதீன மடத்தில் வாய்ப்பாட்டு மற்றும் இசை பள்ளி மாணவர்களுக்கு அக்ஷராப்பியாசம் என்கிற ஆரம்பக்கல்வி இன்று தொடங்கியது.
No comments