ஏலகிரி மலையில் சங்க இலக்கியமும் வாழ்வியலும் நூல் வெளியிட்டு விழா.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தொன் போஸ்கோ கல்லூரியில் சென்னை சலேசிய சபை மாநிலத் தலைவர் வருகையொட்டி இன்று காலை சிறப்பு இறை வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்றது. தொன் போஸ்கோ கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் த.லதா அம்மையார் அவர்கள் எழுதிய சங்க இலக்கியமும் வாழ்வியலும் என்ற நூலினை சென்னை சலேசிய சபை மாநிலத் தலைவர் டான் போஸ்கோ லூர்துசாமி அவர்கள் வெளியிட நூலின் முதல் பிரதியினை கல்லூரியின் இல்லத் தந்தை முனைவர் போஸ்கோ அகஸ்டின் அவர்களும், கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை முனைவர் ததேயுஸ் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.
மேலும் பிரதிகளை உடனிருந்த கல்லூரியின் துணை முதல்வர் அருட்தந்தை பால்ராஜ், பொருளாளர் , அருட் தந்தை சேவியர் ராஜ், அருட் தந்தை ஹென்றிக் மற்றும் விடுதி இயக்குநர் அருட்தந்தை சார்லஸ் கிரேஸ் அவர்களும் பெற்றுக் கொண்டனர். சங்க இலக்கியமும் வாழ்வியலும் என்னும் நூலில் சங்க கால மக்களின் வாழ்வியல் சிந்தனைகளான அறம், விருந்து, கல்வி, கொடை, திருமணமுறைகள், மக்கட்பேறு முதலியவைகள் குறித்து பேசப்பட்டுள்ளது.
No comments