கணவனை தாக்கிய மூன்று பேர் கும்பலை கைது செய்ய வலியுறுத்தி கைக்குழந்தையுடன் பெண் சாலை மறியல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜீஸ்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலி இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவரது கணவர் சின்ராசு நான்கு மாதங்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தை உளுந்தூர்பேட்டை கார்னேஷன் தெருவை சேர்ந்த புலிராசு என்பவரிடம் 20,000 ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார்.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை செல்லும் வழியில் கமலி பெட்டி கடை வைத்துள்ள நிலையில் கடையில் இருந்த கமலி மற்றும் சின்ராசுவிடம் வியாழக்கிழமை இரவு அங்கு வந்த புலிராசு மற்றும் அவரது ஆதரவாளர்களான உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விஜய், சூர்யா உட்பட 5 பேர் சேர்ந்து கமலி அவரது கணவர் சின்ராசுவை தகராறு செய்ததோடு அவரை தாக்கி உள்ளனர்.
இதையடுத் கமலி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நிலையில் அங்கு புலிராசு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் வந்து தகராறு செய்ததோடு சின்ராசுவை மீண்டும் தாக்கி உள்ளனர். குறித்து கமலி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கமலி அவரது கணவர் சென்று ஆசை மற்றும் அவரது உறவினர்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையமா முன்பாக கைக்குழந்தையுடன் இன்று வெள்ளிக்கிழமை சென்னை சாலையில் தரையில் படுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசாரிடம் இவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சுமார் ஒரு மணி நேரமாக சாலையிலிருந்து எழுந்திருக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதன் பின் தகவல் அறிந்த காவல் உதவி ஆய்வாளர் குமரேசன் மற்றும் போலீசார் அவர்களிடம் சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து சாலையில் படுத்து போராட்டம் நடத்தியவர்களை குண்டு கட்டாக தூக்கி அவர்களை அப்புறப்படுத்தினர்
அதிகாலை நேரத்தில் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய முன்பாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
No comments