மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியல். 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் 2023- 24 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பு குழு தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் திரளான விவசாயிகள் பங்கேற்று, உண்மைக்கு புறம்பான காப்பீடு இழப்பீட்டுக்கான அரசாணையை ரத்து செய்திட வேண்டும், மேட்டூர் அணை வறண்டு 2023 ஆகஸ்ட் 7ஆம் தேதியே அணை மூடப்பட்டதால் சம்பா சாகுபடி முற்றிலும் அழிந்த நிலையில் காப்பீட்டுக்கான இழப்பீட்டை நிபந்தனை இன்றி 100% வழங்கிட வேண்டும், ஆண்டுதோறும் அறுவடை ஆய்வு அறிக்கையை மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு ஒப்புதல் பெற்று மகசூல் இழப்பு இறுதி செய்வதை கட்டாயமாக்கிட வேண்டும், தனியார் காப்பீடு நிறுவனங்களை அனுமதிக்க கூடாது, தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மட்டுமே காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ள நெடுஞ்சாலை வரை பேரணியாக வந்த விவசாயிகள் மயிலாடுதுறை பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகளை சீர்காழி போலீஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
No comments