பாச்சல் ஊராட்சியில் குப்பைக் கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்!.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பாச்சல் ஊராட்சியில், லட்சுமிநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குப்பை கழிவுகள் அதிகம் தேங்கும் இடங்களில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளனர்.
தினமும் ஏராளமான குழந்தைகள் பொது மக்கள் கடந்து செல்லும் சாலையோரத்தில் குப்பை கொட்டுவதால், துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றி, குப்பை கொட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments