சிறுபுலியூர் கிராமத்தில் தனிநபர் வீட்டில் இருந்த ஐந்து ஐம்பொன் சிலைகள் மீட்டு கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சிறுபுலியூர் கிராமம். இந்த கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை, வினாயகர், முருகர் உள்ளிட்ட 5 ஐம்பொன் சிலைகள் கடந்த 30 வருடத்திற்கு மேலாக இதே கிராமத்தை சேர்ந்த திருமேனி என்பவருடைய வீட்டில் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மதனா தலைமையில், சரக ஆய்வாளர் சுகன்யா, கிராம நிர்வாக அலுவலர் பொன்மணி, ஊராட்சி மன்ற தலைவர் தவஞானம் மற்றும் திருநாவலூர் போலீசார், பரிக்கல் திருக்கோயில் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் ஐந்து ஐம்பொன் சிலைகளையும் மீட்டு சிறுபுலியூர் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு முருகா, முருகா என கோஷம் போட்டு வழிபட்டனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட 5 ஐம்பொன் சிலைகள் தனிநபர் வீட்டில் இருந்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டதால் கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
No comments