உளுந்தூர்பேட்டையில் டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி காவல் நிலையம் முன்பு ஒட்டபட்ட போஸ்டரால் பரபரப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் முன்பாக அகில பாரத இந்து மகாசபை மாநில பொதுச் செயலாளர் பெரி செந்தில் அவர்களின் சார்பாக டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி தமிழக அரசே மாவட்ட நிர்வாகமே பள்ளிகளுக்கு அருகாமையிலும் பள்ளிக்கு செல்லும் பாதையிலும் உள்ள அரசு மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உளுந்தூர்பேட்டை சென்னை மார்க்கம், திருச்சி மார்க்கம் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள அரசு மதுபான கடையை உடனே அகற்றிடு, போராட்டம் தூண்டாதே என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் உளுந்தூர்பேட்டையில் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
No comments