ஈரோடு கொடுமுடியில் பைப்லைன் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைத்து தராமல் இருப்பதால் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாக்குவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கொடுமுடியில் பைப்லைன் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு பணிகளானது நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் மும்மூர்த்தி ஆலயத்தின் அருகே பைப்லைன் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சரிவர மூடாமல் குண்டும் குழியுமாக இருப்பதோடு சாலைகளில் கற்கள் மற்றும் ஜல்லி கற்கள் போன்றவைகளை குவித்து வைத்து சென்றுள்ளனர்.
இதனால் ஆலயத்திற்கு வரக்கூடிய பக்தர்களும் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாக்குவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து பைப் லைனுக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments