Breaking News

குடியாத்தம் பகுதி நேர நியாயவிலைக் கடையை திறக்க வேண்டும் கல்லப்பாடி ஊராட்சி மக்கள் பெரும் எதிர்பார்ப்பு.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கல்லப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள தாய் நியாய விலை கடையில் சராசரியாக 854 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் கல்லப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட முதலியார் தோனிக்கான் பட்டி ஏரி முதலியார் புதூர் அருந்ததி காலனி என 129 குடும்ப அட்டைகளும் உள்ளன.

இந்தத் தாய் நியாய விலை கடைக்கு வந்து செல்லும் தூரம் 5 கிலோமீட்டர் தூரம் இங்கு சுற்றிலும் மலை கிராமம் என்பதால் யானை காட்டுப்பன்றி சிறுத்தை விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தல் என இருக்கும் நிலையில் மழைக்காலங்களில் ஓடைகளை கடந்து செல்வதில் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் தாய்மார்கள் ஆகியோர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது 

எனவே முதலியார் ஏரி பகுதியில் தயார் நிலையில் உள்ள பகுதிநேர நியாய விலைக் கடையை நடைமுறைக்கு கொண்டு வருவதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி மற்றும் மாவட்ட வளங்கள் அலுவலர் கள்ள பாடி ஊராட்சி மன்றம் இவைகளின் முழு ஒத்துழைப்புடன் விரைவில் பகுதி நேர நியாய விலை கடையை திறக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

கல்லப்பாடி ஊராட்சியின் ஒப்புதலுடன் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் குமார் துணைத் தலைவர் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒப்புதலுடன் இந்தப் பகுதி நேர நியாய விலை கடைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது 


- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்

No comments

Copying is disabled on this page!