பொன்னேரியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசிய அரசியல் மற்றும் மத ஒற்றுமை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்பு.
மகாத்மா காந்தியடிகளின் 155 வது பிறந்தநாள், பெருந்தலைவர் காமராஜர் 49 வது நினைவு நாள், லால் பகதூர் சாஸ்திரி 120 வது பிறந்தநாள் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை முன்னிட்டு காந்திய சிந்தனை, அமைதி, மதநல்லிணக்கம், அகிம்சை, வெறுப்பு அரசியலுக்கு எதிரான பிரச்சாரம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான பொய் மற்றும் அவதூறு பிரச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நடைப்பயணத்தில் பங்கேற்றனர். தடபெரும்பாக்கம் கூட்டுச்சாலையில் இருந்து திருவேங்கடபுரம், அம்பேத்கர் சிலை, புதிய பேருந்து நிலையம், நேரடி வழியே சென்று அண்ணா சிலை வரை 4 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைப்பயணம் சென்றனர். தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்தும் தெருமுனை கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
No comments