வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் ராஜீவ் காந்தி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் கோலாகலமான ஆயுத பூஜை நிகழ்ச்சி.
வேலூர் மாவட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் ராஜீவ் காந்தி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் ஆயுத பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சி ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தலைவர் எம். முனியப்பன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக (ம) காங்கிரஸ் தலைவர் டீக்காராமன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் போது ராஜீவ் காந்தி ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தலைவர் எம். முனியப்பன் கூறுகையில் நாங்கள் அனைத்து ஓட்டுனர்களும் வருடா வருடம் அனைவரும் ஒன்று கூடி பெரும் மகிழ்ச்சியோடு இந்த ஆயுத பூஜை நிகழ்ச்சியை ஒன்று கூடி எங்களுக்கு தினமும் உணவளிக்கும் எங்கள் ஆட்டோவிற்கு பூஜை செய்வது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார் பின்னர் இவ்விழாவில் ஆட்டோ ஓட்டுநர் சங்க செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் விவேகானந்தன் மற்றும் அரிகிருஷ்ணன் சுரேஷ் பூபதி தண்டபாணி ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments