ராஜ்பவன் தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் நடந்தது..
புதுச்சேரி மாநிலம், ராஜ்பவன் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரவிந்தர் வீதியில் உள்ள தொகுதி திமுக அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் மோகன் தலைமை வகித்தார். தொகுதி அவைத் தலைவர் புகழ்மணி முன்னிலை வகித்தார்.மாநில கழக அவைத்தலைவர், முன்னாள் கல்வி அமைச்சர் எஸ்.பி. சிவக்குமார் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் தொகுதி கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மறைந்த முரசொலி செல்வம் அவர்களுக்கு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு பெருவாரியான வாக்குகள் அளித்த ராஜ்பவன் மக்களுக்கு நன்றி தெரிவிப்பது, ஏஎப்டி, பாரதி மற்றும் சுதேசி பஞ்சாலைகளை உடனடியாக திறந்து நடத்திட துணைநிலை ஆளுநர், முதல்வர் வலியுறுத்துவது, ராஜ்பவன் தொகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை பாரபட்சமின்றி அங்கு வசித்த மக்களுக்கு வழங்கவும், மிகுதி உள்ள குடியிருப்புகளை தொகுதியில் உள்ள வீடற்ற ஏழை மக்களுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.கூட்ட நிறைவில், மாநில தொண்டர் அணி அமைப்பாளர் வீரய்யன் நன்றி கூறினார்.
No comments