பெரிய பேட்டையில் ஸ்ரீ அழகு பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி திருவிழாவை நவராத்திரி விஜயதசமி உற்சவ விழா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு 5 சனிக்கிழமைகளிலும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரிய பேட்டை ஸ்ரீ அழகு பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு நவராத்திரி மற்றும் விஜயதசமி உற்சவம் நடைபெறுவது வழக்கம், இந்த நிலையில் மூன்றாவது சனிக்கிழமையான இன்று மூலவர் அலங்கார திருமஞ்சன அபிஷேகம், ஸ்ரீ அழகு பெருமாள் மூலவர் அலங்கார தரிசனம், கருட கம்பம் மேல்விக்கு ஏற்றுதல், எம்பெருமாள் ஆலயத்தில் உலா வருதல், உற்சவமூர்த்தி விசேஷ பூஜை, மங்கள ஆர்த்தி, ஏகாந்த சேவை மங்களம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனை காண வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- பு.லோகேஷ் திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்.
No comments