உல்லாச திருமணம் எனும் பிரெஞ்சு நாவலை தமிழில் மொழி பெயர்த்த புதுவை பிரெஞ்சு பழ பேராசிரியர் சுப்பராய நாயக்கருக்கு விருது வழங்கப்பட்டது
காந்தி ஜெயந்தி மற்றும் அருட்பிரகாச வள்ளலார் 57ஆம் ஆண்டு விழா சென்னையில் உள்ள முத்தமிழ் பேரவையில் நடைப்பெற்றது.அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் சார்பில் 10 மொழிபெயர்ப்பு நூல்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில்,தஹர் பென் ஜெலூன் எழுத்தாளர் எழுதிய உல்லாச திருமணம் எனும் பிரெஞ்சு நாவலை,எளிய நடையில் தமிழ் மொழிப்பெயர்த்த புதுச்சேரி பிரெஞ்சு ஆசிரியர் வெங்கட சுப்பராய நாயக்கருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்,பொள்ளாச்சி மகாலிங்கம் மாணிக்கம், ஹரிஹரசுதன், சிற்பி பாலசுப்பிரமணியன், அவ்வை அருள், பேராசிரியர் ய. மணிகண்டன் மற்றும் பேராசிரியர் பழனி. கிருஷ்ணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments