கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தின் கிளை பங்கான புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலய 27 ஆம் ஆண்டு திருவிழா.
10ம் நாள் திருவிழா திருப்பலி நடைபெற்றது, அருட்தந்தையர்களை இறைமக்கள் பவனியாக அழைத்து வந்தனர். பின் பாளை மறைமாவட்ட பொருளாளர் அந்தோணிசாமி அடிகளார் வல்லம் பங்குத்தந்தை விசுவாச ஆரோக்கி,ய ராஜ் அடிகளார் புனித சூசையப்பர் திருத்தல பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார் உதவி பங்குத்தந்தை அருண்குமார் அடிகளார், திண்டுக்கல் செம்பட்டியை சேர்ந்த குரு மாணவர்கள் ஆண்டனி, அமித் ஆகியோர்கள் இணைந்து இறை செல்வங்களை வாரி வழங்கும் செல்வ மாதா எனும் மறையுரையுடன் திருப்பலி நிறைவேற்றினார்கள்.
திருப்பலி முடிந்தவுடன் ஆலயத்தில் கொடி இறக்கம் செய்யப்பட்டு திருவிழா இனிதே நிறைவேறியது பின்னர் இறை மக்கள் அனைவருக்கும் அசன விருந்து வழங்கப்பட்டது, இதில் ஏராளமான மத வேறுபாடு இன்றி வெளியூர்களில் இருந்தும் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். கிறிஸ்தவர்களும் வேறு மதத்தினர்களும் இதில் கலந்து கலந்து கொண்டிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது இதில் நாங்கள் வருடம் தோறும் கலந்து கொள்வோம் என்று கூறினார்கள்.
No comments