சர்க்கிள் தி பாண்டிச்சேரி கிளப் காலி செய்யவும், நிலுவைத் தொகையை வசூலிக்கவும் பொதுப்பணித் துறைக்கு புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபைக்கு பக்கத்தில் 48,987 சதுரடி பரப்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில், 'சர்க்கிள் தி பாண்டிச்சேரி என்ற கிளப்' செயல்பட்டு வருகிறது. கடந்த 1938ம் ஆண்டு சமூக கலாசார முன்னேற்ற ஆலோசனைக்காக துவங்கப்பட்ட இந்த கிளப்பில், மதுபான பார் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது.இந்நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக சர்க்கிள் தி பாண்டிச்சேரி கிளப், வாடகை பாக்கி தராமல் இருப்பதை சுட்டிக் காட்டி பொதுப்பணித்துறை கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து சர்க்கிள் தி பாண்டிச்சேரி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது.அதன்பேரில், சர்க்கிள் தி பாண்டிச்சேரி கிளப் நிர்வாகம், பொதுப்பணித்துறை நடவடிக்கைக்கு எதிராக புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதைத் தொடர்ந்து, சர்க்கிள் தி பாண்டிச்சேரி கிளப் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை முதன்மை மாவட்ட நீதிபதி சந்திரசேகரன் தள்ளுபடி செய்ததுடன், வாடகை பாக்கி காரணமாக கிளப்பை பொதுப்பணித்துறை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டார்.
No comments