புதுச்சேரி ஆசிரியர் கலைக்குழுவின் 36 -ஆம் ஆண்டு விழா மற்றும் 17-ஆம் ஆண்டு நாடகப் போட்டி பரிசளிப்பு விழா
புதுச்சேரி தட்டாஞ்சாவடி அய்யனார் கோயில் திடலில் புதுச்சேரி மாநில கலை,பண்பாடு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் PRN_திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடில் உள்ள பல மாவட்டங்களை சேர்ந்த நாடக கலைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு நாடகங்கள் நடத்தப்பட்டன.
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த நாடகம் மற்றும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த வில்லன், சிறந்த நகைச்சுவை, சிறந்த இயக்கம் என பல்வேறு பிரிவுகளில் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன..
இவ்விழாவில் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் இவ்விழாவுக்கான ஏற்பாட்டை ஆசிரியர் கலைக்குழு செயலர் முருகேசன் செய்து இருந்தார்.
No comments