புதுச்சேரி மாநில காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கத்தை, தமிழ்நாடு ஜமாத் மாநில நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரகுமான், மாநில பொருளாளர் இப்ராஹிம் உட்பட நிர்வாகிகள், பாராளுமன்ற உறுப்பினரும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான வைத்திலிங்கத்தை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,
வக்பு வாரியத்தை முழுமையாக செயலிழக்க,வக்பு வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை செய்வதற்கு மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது என்றும், இதனை பாராளுமன்றத்தில் எதிர்க்க வேண்டுமென வைத்திலிங்கம் எம்பி யை நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.
மேலும் ரயில்வே பாதுகாப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், காலி பணியிடங்களை அந்தந்த மாநிலங்களை சார்ந்தவர்களை கொண்டு நடப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்த வேண்டுமென உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்ததாக தெரிவித்தனர்.
No comments