புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள மாநில பேரிடர் பாதுகாப்பு மையத்தில் கனமழை காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஆய்வு செய்து பணிகளை முடுக்கிவிட்டார்..
புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறையின் அவசர கால உதவி மையத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து செயலர் நெடுஞ்செழியன், ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புதுச்சேரி, காரைக்காலில் கனமழை எச்சரிக்கையால் அதிகாரிகள் கூட்டம் நடந்தியுள்ளோம். அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையிலிருந்து தலா 30 நபர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் புதுச்சேரிக்கு வந்துள்ளன இதில் இரண்டு குழுக்கள் புதுச்சேரிக்கும் ஒரு குழு காரைக்காலுக்கும் செல்கிறது. மீனவர்கள் கிராமங்களுக்கு எச்சரிக்கை ஏற்கெனவே தந்துள்ளோம். செல்போனிலும் தகவல் தந்துள்ளோம். அனைவரும் கரை திரும்பி வருகின்றனர். மீனவ பஞ்சாயத்தாருக்கும் தெரிவித்துள்ளோம்.கொம்யூன் பஞ்சாயத்துகளில் மோட்டார்கள் போதியளவில் இல்லை என்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் விநியோகம் சீராக விநியோகிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
No comments