புதுச்சேரி இ.சி.ஆர் சாலையில் அரைகுறையாக மூடப்பட்ட பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இ.சி.ஆரில் பாதாளசாக்கடை அமைக்கும் பணி கடந்த ஆறு மாதமாக நடந்து வருகிறது. இப்பணிக்காக பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டன.
ராட்சத கான்கிரீட் பாதாளசாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பணி முடிந்த இடங்களில் தோண்டிய பள்ளங்கள் மூடப்பட்டு வருகின்றன. ஆனால் இப்பள்ளங்கள் சரிவர மூடாமல் அப்படியே அரைகுறையாக விடப்பட்டுள்ளன.
லேசான மழைக்கே இவை சகதிகளாக மாறி, இ.சி.ஆரில் வரும் வாகனங்களை மிரட்டி வருகின்றன. சற்று கவனம் சிதறினாலும் வாகனங்கள் வழுக்கி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால், கனமழை பெய்யும்போது பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வரும் வாகனங்கள சகதியில் சிக்கி கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பணி முடிந்த இடங்களில் பள்ளங்களை சரிசெய்து, போர்க்கால அடிப்படையில் நிரந்தரமாக தார் சாலை போட பொதுப்பணித் துறையின் நெடுஞ்சாலை கோட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை குரல் எழுந்துள்ளது
No comments