அம்பேத்கர் சிலை அருகே மின் டிரான்ஸ்பார்மர் நிறுவக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு கிராமத்தில் புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு மின்வாரிய துறையினர் ஒப்பந்த அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் ஆதிதிராவிடர் பகுதி மக்கள் அம்பேத்கர் சிலை அருகே மின் டிரான்ஸ்பார்மர் நிறுவக்கூடாது என பொதுமக்கள் கூறியதால் ஜோலார்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மாலா சேகர் சம்பந்தப்பட்ட இடத்தில் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments