"தமிழ் வளர்ச்சியை முன்னிறுத்துவோர் பேராசிரியர்களா? அல்லது எழுத்தாளர்களா?" அமைச்சர் திருமுருகன் தலைமையில் விவாத மேடை
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி சிறகம் இனைந்து
"தமிழ் வளர்ச்சியை முன்னிறுத்துவோர் பேராசிரியர்களா? அல்லது எழுத்தாளர்களா?" என்னும் தலைப்பில் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற விவாத மேடையினை புதுச்சேரி கலை பண்பாடு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் PRN_திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. மேலும் தமிழ் சான்றோர்கள் ஏழு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ் அறிஞர்களையும் மாணவ மாணவிகளையும் அமைச்சர் சால்வை அனிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வினை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் இது போன்ற நிகழ்வுகள் புதுவையில் தான் நடைபெறும் எனவும் முதன் முறையாக தற்பொழுது இந்நிகழ்வு காரைக்காலில் நடைபெறுகிறது. எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் இருவருமே தமிழ் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் என்றும் பேச்சுத்திறனால் மட்டும் தான் சாதித்து பரிசுகளை பெற முடியும் எனவும் இதற்காக வருகை புரிந்த கல்லூரி மாணவ மாணவிகனை பாராட்டுகிறேன் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வின் விவாத மேடை நடுவர்களாக முனைவர் பொன். பத்மநாபன் முனைவர் மு.சாய்பு மறைக்கையார் மற்றும் திருமலை. நாகராஜன் உள்ளிட்டவர்களும் கல்லூரி முதல்வர் வா.கந்தவேல் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
No comments