தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளின் தலைமையில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்தியன் ஷிட்டோரியு கராத்தே டு பள்ளி நடத்தும் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியை தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் அரசியல் ஆலோசனை உயர்நிலை குழு ஆறுமுகம், மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், மாநில பொதுச் செயலாளர் யுவராஜா, ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், இளைஞர் அணி மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோர்கள் தலைமையில் ஈரோடு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர்கள் மார்க்கெட் சஞ்சய்,
ஸ்ரீமதி (எ) காந்திமதி, ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் ராமன் ஆகியோர்கள் முன்னிலையில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்ட, வீரர், வீராங்கனைகளுக்கு கேடயம் வழங்கி சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து சிலம்பாட்ட மாணவ, மாணவிகள் சிறப்பு விருந்தினர்கள் முன் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.மேலும் இந்த கராத்தே போட்டி காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த கராத்தே போட்டியில் ஏராளமான கராத்தே மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் இந்தியன் ஷிட்டோரியு கராத்தே பள்ளி மாவட்ட தலைமை பயிற்சியாளர் திருமலை நன்றியுரை வழங்கினார்.
No comments