புதுச்சேரி ராஜீவ் காந்தி ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் அறிவித்த, உதவி தொகையை உயர்த்த வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் இயக்குனர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பிராந்தியத்தில் ராஜீவ் காந்தி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் படித்து கொண்டே பயிற்சி மருத்துவராக பணியாற்று வருகின்றனர். அவர்களுக்கு உதவித் தொகையாக மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கி வந்த நிலையில் பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுடைய பயிற்சிக்கான உதவித்தொகை 5000 இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்து இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை அரசு செவிசாய்க்கவில்லை எனக் கூறி புதுச்சேரி கடற்கரை அருகே உள்ள ஆயுஷ் இயக்குனரகம் முன்பு பயிற்சி மருத்துவர்கள் தங்களது பயிற்சிக்கான உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments