புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என பெரிய கடை போலிசார் திடீர் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் கூல் லிப்,ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் புகையிலை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, பெரிய கடை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர்,சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலிசார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆம்பூர் சாலை,செஞ்சி சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட கூல் லிப்,ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என திடீர் சோதனை மேற்கொண்டனர். போலீசாரின் திடீர் சோதனையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்கள் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
No comments