புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய சிறுவன் உட்பட 2 இளைஞர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலிசார் கைது செய்தனர்
புதுச்சேரி மங்களம் தொகுதிக்குட்பட்ட சிவராந்தகம் பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை கடந்த மாதம் நள்ளிரவில் மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், காவல் கண்காணிப்பாளர் வம்சித ரெட்டி உத்தரவின் பேரில்,மங்களம் போலிசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது எம்ஜிஆர் சிலை அருகே இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில்,அதே பகுதியை சேர்ந்த சிறுவன் மற்றும் சாரதி (19),பூவரசன்(20) என்பது தெரிய வந்தது.இதனையடுத்து ரெயின்போ நகரில் பதுங்கி இருந்த மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.விசாரணையில் மதுபோதையில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியது தெரிய வந்தது.மேலும்,சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
No comments