புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை வஸ்துக்களை பறிமுதல் செய்தனர்
புதுச்சேரியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கஞ்சா, கூல் லிப், ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களின் பழக்கத்தால் சீரழிந்து வருகின்றனர். காவல்துறையினரும் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், லாஸ்பேட்டை - பெத்துசெட்டிபேட் சுப்பிரமணியர் கோவில் தெருவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பெரிய அளவில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து லாஸ்பேட்டை மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார், சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று,சந்தேகப்படும்படி நின்றிருந்த செந்தில்வேலன் மற்றும் முகேஷ் குமார் ஆகிய இருவரை விசாரித்தனர்
விசாரணையில் ,பெங்களூரில் இருந்து ஹான்ஸ்,கூல்லிப்,பான் மசாலா போன்ற போதை பொருட்களை வாங்கி வந்து புதுச்சேரியில் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இருவர் மேலும் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments