புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இரும்பு கம்பிகள் திருடிய சட்டக் கல்லூரி ஊழியர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் காணாமல் போனது.இது தொடர்பாக நிர்வாகம் அளித்த புகாரி பேரில் காலாப்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகர், சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில்,சட்டக்கல்லூரியில் எம்டிஎஸ் ஊழியராக பணியாற்றி வரும் சசிகுமார், ஒடிசாவை சேர்ந்த சுதர்சன் மற்றும் ஸ்வாதின் ஜனா ஆகியோருடன் கூட்டு சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments