புதுச்சேரி வில்லியனூர் அருகே ஆளில்லா வீட்டில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலிசார் கைது செய்தனர்.
புதுவை வில்லியனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்.இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையில் போலீசார் குற்றவாளிகள் வீடுகளில் நேற்றிரவு அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஜி.என்.பாளையம் நடராஜா நகரில் உள்ள குற்றவாளி வீடுகளில் போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது, அங்கு ஆளில்லா வீடு ஒன்று இருப்பது தெரிந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அதிரடியாக ஆளில்லா வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் அதேபகுதியை சேர்ந்த மருமணி (எ) மணிகண்டன் (வயது 30) மற்றும் சரண் (எ) சின்ன சரண் (வயது 24) ஆகியோர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments