Breaking News

எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மாஜி எம்.எல்.ஏ.,க்களை வீடியோ காலில் தோன்றி மிரட்டிய சைபர் கிரைம் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்


 

புதுச்சேரி மற்றும் வேறு பிராந்தியத்தை சேர்ந்த இரு தேசிய கட்சிகளின் இரு எம்.எல்.ஏ.,க்களும், மாஜி எம்.எல்.ஏ., என 3 பேர் சைபர் கிரைம் மோசடிக்காரர்களின் வலையில் சிக்கியுள்ளனர்.மூவரையும் தனித்தனியாக கடந்த சில நாட்களுக்கு முன் சைபர் கிரைம் மோசடி கும்பல் வீடியோ காலில் தொடர்பு கொண்டது. வீடியோ காலை அட்டன்ட் செய்தவுடன், மறுபக்கத்தில் நிர்வாணமாக ஒரு பெண் தோன்றியுள்ளார். அடுத்த சில நிமிடத்தில் அந்த வீடியோ கால் இணைப்பை மூவரும் துண்டித்து விட்டனர்.


அடுத்த சில நிமிடத்தில் சைபர் கிரைம் மோசடி கும்பல், எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொண்டு நீங்கள் நிர்வாணமான பெண்ணுடன் பேசும் வீடியோ பதிவு உள்ளது. குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் வீடியோவை வெளியிட மாட்டோம். மறுத்தால் சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டினர்.இதுகுறித்து மூவர் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார், மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!