உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி சேர்த்து வழங்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவி ஆட்சியர் ஆனந்த்குமார் சிங் தலைமையில் நடைபெற்றது இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி ஒருவர் திடீரென எழுந்து வந்து துணை ஆட்சியரிடம் தான் கொண்டு வந்த அரிசியை காண்பித்து ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டை முன் வைத்தார் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த விவசாயி துணை ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக துணை ஆட்சியர் ஆனந்த்குமார் சிங் தெரிவித்தார் மேலும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
No comments