Breaking News

முன்னாள் அமைச்சர் கா.சுந்தரம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடந்த 18தேதி முன்னாள் அமைச்சர் கா.சுந்தரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார் அவருடைய மறைவை கேட்டு அதிர்ச்சி அடைந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருடைய உடலுக்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தி அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் பின்னர் கா.சுந்தரத்தின் படத்திறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் மீஞ்சூரில் நடைபெற்றது இதில் கா.சுந்தரம் அவர்கள் 1989 முதல் 2001 வரை முத்தமிழ் அறிஞர் கலைஞருடன் அமைச்சராக பணியாற்றிய புகைப்படங்களை கண்காட்சிகாக வைக்கப்பட்டது அதனை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

அதனை அமைச்சர்கள் பார்வையிட்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் பின்னர் முன்னாள் அமைச்சர் கா.சுந்தரம் அவர்களின் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட படத்தினை அவருடைய மனைவி எழிலினி அவருடைய மகன்கள் செந்தில் ராஜ்குமார், தமிழ் உதயன், தமிழ் பிரியன், மற்றும் குடும்பத்தினர்  முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் பின்னர் அமைச்சர்கள் சா.மு.நாசர், சி.வி.கணேசன், ஆர்.காந்தி, பெரியகருப்பன், மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் கிரிராஜன், அந்தியூர் செல்வராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி, திருத்தணி எஸ்.சந்திரன் துரை சந்திரசேகர், கே.பி.பி.சங்கர், உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திமுக உள்ளிட்ட நிர்வாகிகள் கா.சுந்தரத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 

No comments

Copying is disabled on this page!