ஊரை காலி செய்ய வலியுறுத்தி வனத்துறை நோட்டீஸ்: ரத்து செய்து, குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா குருமலை கிராம பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா, குருமலை கிராமம், வி.பி.சிங்நகரில் நாங்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் வீட்டு தீர்வை, மின் இணைப்பு, குடிநீர் தொட்டி, சிமெண்ட் சாலை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 15 நாட்களுக்குள் கிராம மக்கள் வீடுகளை காலி செய்யுமாறு வனத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் வி.பி.சிங்நகர் மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். எனவே, மாவட்ட கலெக்டர் இந்த விசயத்தில் தலையிட்டு வனத்துறையினர் அளித்துள்ள நோட்டீசை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
No comments