உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற வாகனத்திற்கு அபராதம் விடுத்த போக்குவரத்துக் காவலர்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார்கள் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்தை சரி செய்து வந்த நிலையில் டி.வி.யின் ரோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மினி லாரி நிக்குது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போக்குவரத்து காவலர் பால்ராஜ் அவர்களிடம் தெரிவித்த நிலையில் நின்ற மினி லாரியை போக்குவரத்து உதவி ஆய்வாளர் அஷ்டமூர்த்தி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மினி லாரி மீது ரூபாய் 500 அபராதம் விதித்து மேலும் இதுபோல் போக்குவரத்துக்கு இடையூறாக உளுந்தூர்பேட்டை நகராட்சி பகுதியில் நிறுத்தக்கூடாது என்று அறிவுரை வழங்கி போக்குவரத்தை சரி செய்தனர் இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாரிடம் குறை சொல்லி சில நிமிடத்தில் சரி செய்த போக்குவரத்து போலீஸார்களை மிகவும் பாராட்டினார்கள்.
No comments