வைத்தீஸ்வரன் கோயிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதையாத்திரை. மயிலாடுதுறை எம்.எல்.ஏ பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு பாதயாத்திரை நடைபெற்றது. சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கமிட்டியில் சார்பில் தேச நலனுக்காக சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து தலைவர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்துடன் பாதை யாத்திரை நடைபெற்றது. வைத்தீஸ்வரன் கோயில் மேலவீதியில் தொடங்கிய பாதயாத்திரையில் மாவட்ட தலைவரும் மயிலாடுதுறை எம்.எல்.ஏவும் ராஜ்குமார் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் வட்டாரதலைவர்கள் தியாக கார்த்திகேயன்,பாலகுரு,பாலசுப்பிரமணியன், வைத்தீஸ்வரன் கோயில் பேரூர் கழக தலைவர் நடராஜன்,நகரத் தலைவர் லட்சுமணன், மாவட்ட துணை தலைவர் வி.ஆர்.ஏ. அன்பு, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் பங்கேற்று பாதயாத்திரையில் அலங்கரிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் திருவருவப்படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நான்கு விதிகள் வழியாக சென்று வடக்கு வீதியில் பாத யாத்திரை நிறைவடைந்தது.
No comments