உளுந்தூர்பேட்டையில் வி.சி.க மாநாட்டில் 12 தீர்மானங்களை நிறைவேற்றம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வி.சி.க மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டில் விடுதலை சிறுத்தை கட்சியின் நிறுவனர் தலைவர் முனிவர் தொல் திருமாவளவன் தலைமை தாங்கி மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும், அரசமைப்புச் சட்டம் 47ல் கூறியபடி:
1.மதுவிலக்குக்கான சட்டத்தை இயற்ற வேண்டும் 2. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்கிட வேண்டும்.3. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும்.4. மதுவிலக்கு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும்.5. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, மதுபானக் கடைகளை மூடுவதற்குரிய கால அட்டவணையை அரசு அறிவித்திட வேண்டும்.6. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.7. மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பியக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.8. குடி நோயாளிகளுக்கும் போதை அடிமை நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் அவற்றுக்கான மையங்களை உருவாக்க வேண்டும்.9. மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும்.10. 'டாஸ்மாக்' என்னும் அரசு நிறுவனத்தின் மது வணிகத் தொழிலாளர்களுக்கு 'மாற்று வேலை' வழங்கிட வேண்டும்.11. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.12. மதுவிலக்குப் பரப்பியக்கத்தில் அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும்.உள்ளிட்ட 12 தீர்மானங்கள் விசிகவின் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் நிறைவேற்றம்.
இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய மாநிலச் செயலாளர் இரா.நற்சோனை , சிறப்புரை ஆற்றிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , மற்றும் தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் , தலைவர் அய்யா வைகுண்டர் இயக்கம் தவத்திரு பால. பிரஜாபதி அடிகளார், வி.சி.க பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ம. சிந்தனைசெல்வன் , வி.சி.க பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார், கருத்துரையாற்றிய சி.பி.ஐ மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி , பொ.செ இ.மா.தே. சம்மேளனம் சி.பி.ஐ ஆனி ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆர்.சுதா, வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின், ம.தி.மு.க டாக்டர் ரொஹையா ஷேக் முகமது, இந்திய முஸ்லிம் லீக் தேசிய மகளிரணி தலைவர் ஏ.எஸ். ஃபாத்திமா முசபர், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில மகளிரணி பொருளாளர் ஜ.ஷான் ராணி ஆலிமா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயலாளர் முத்துலட்சுமி வீரப்பன். ஆகியோர் கலந்து கொண்டனர். |
No comments