தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் பயணிகள் நிழற்குடை கட்டிடத்தை எம்.சி.சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணியாச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை கட்டிடத்தை எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், பணி மேற்பார்வையாளர் சங்கர், கிராம நிர்வாக அலுவலர் ராஜன், மணியாச்சி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா, கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அய்யாத்துரை, ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், கிளை செயலாளர்கள் முத்துப்பாண்டி, ரத்தினவேல், ஆறுமுகராஜா, முருகன் மற்றும் கப்பி குளம் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments