வேலூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
வேலூர் மாவட்டம் ஊராட்சி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வேலூரில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி கூட்டத் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் திமுக பொதுச்செயலாளர் நீர்வளத்துறை அமைச்சரும் துரைமுருகனுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பள்ளிகள் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்குவது சாலைகள் அமைத்தல் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் தேவையான பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறு பைப் லைன் அமைத்தல் உள்ளிட்டவைகளுக்கு தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.
No comments