சீர்காழியில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பாதயாத்திரை.... மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பங்கேற்பு.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கமிட்டியில் சார்பில் தேச நலனுக்காக சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்துடன்
சீர்காழி தாடாளன் கோயில் வீதியில் தொடங்கிய பாதயாத்திரைக்கு மாவட்ட தலைவரும் மயிலாடுதுறை எம்.எல்.ஏவுமான ராஜகுமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் வட்டார தலைவர்கள் ராதாகிருஷ்ணன், பாலகுரு, பாலசுப்பிரமணியன்,கார்த்திகேயன் வைத்தீஸ்வரன் கோயில் சரத்சந்திரன் முன்னிலை வகித்தனர். நகரத்தலைவர் லட்சுமணன் வரவேற்றார்
மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் பேரணியை தொடங்கி வைத்து பங்கேற்றார்.பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது
. தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் எதிரே நேதாஜி சிலை அருகே பாத யாத்திரை நிறைவடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேதாஜி, அம்பேத்கர், வ.உ.சி, ராஜாஜி ஆகிய தேச தலைவர்களின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்ப ட்டது.
இதில் மாவட்ட துணை தலைவர் அன்பு, மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் கிள்ளிவளவன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments