பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்..
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டத்திற்கு அறிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கவர்னர் ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இன்று பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் கூட்டுக் குழுவின் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஏற்கனவே அறிவித்தபடி வரும் 28ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments