திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 48 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகின்ற 14ஆம் தேதி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
திருச்செந்தூரில் தொடங்கிய இந்த பெருந்திட்ட வளாகப் பணிகள் HCL நிறுவனம் சார்பில் ரூபாய் 200 கோடி நன்கொடையாகவும் திருக்கோயில் நிதி 100 கோடி என மொத்தம் 300 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கியது. இந்த பெருந்திட்ட வளாக பணிகளில் கோவிலை சுற்றி இருந்த மண்டபங்கள் பக்தர்கள் தங்கும் தங்கும் விடுதிகள் மற்றும் பக்தர்கள் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கு ஏற்பாடான வளாகங்களும் புதிதாக அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த பணிகளை பார்வையிடுவதற்காக இன்றைய தினம் தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்தார். அவர் கோவிலை சுற்றி நடந்து வரும் பெருந்திட்ட வளாகப் பணிகள், பயணியர் விடுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நடந்து வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் நிறைவு பெற்ற பணிகளையும் பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து அங்கு நடந்து வரும் பணிகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அதை தொடர்ந்து கோவிலில் தரிசனம் செய்தார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திர மோகன், திருச்செந்தூர் கோவில் தக்கார் அருள் முருகன் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 48 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகின்ற 14ஆம் தேதி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். மேலும் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி, பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் இடம் உள்பட 20 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளையும் அன்றைய தினம் தொடங்கி வைக்க உள்ளார். அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள் முழு பணிகளும் நிறைவு பெற்று கும்பாபிஷேக பணிகள் நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் பொருட்டு ரூபாய் 20 கோடி ரூபாய் மதிப்பில் கடலில் கற்களை போட்டு தடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஆவணம் செய்யப்படும். திருச்செந்தூர் ஆவணித் திருவிழா மற்றும் மாசி திருவிழாக்கு உள்ள சுவாமியின் வாகனங்கள் சேதமடைந்து காணப்படுகிறது என்றும் அதனை சரி செய்ய வேண்டும் என்று கேட்டபோது கடந்த 2011 அதிமுக ஆட்சியில் அதனை முறையாக பராமரிக்க தவறிவிட்டார்கள். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருவதாக கூறினார்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல் : 7339011001
No comments