புதுச்சேரியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரேஷன் கடைகள் திறப்பு-தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட பரிசு பொருளான இரண்டு கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசியை துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் துவக்கி வைத்தனர்..!
புதுச்சேரியில் கடந்த 2018 ஆண்டு முதல் அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டு அரிசிக்கான பணத்தை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் மீண்டும் ரேஷன் கடையை திறக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரேஷன் கடைகள் இன்று திறக்கப்பட்டது.புதுச்சேரி துணைநலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் ஆகியோர் மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புதிய நியாய விலை கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட இரண்டு கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசியை வழங்கினர்.
No comments