வேலூர் மாவட்டம் ஆன்லைன் மோசடி மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளியை தட்டி தூக்கிய மாவட்ட காவல் கண்காணிப்பளர் என். மதிவாணன்.
இதேபோன்று கடந்த மே மாதம் பேர்ணாம்பட்டு ஏரி குத்தி பகுதியை சேர்ந்த பாபு என்பவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் உங்களுக்கு ஆன்லைன் மூலமாக லோன் கொடுப்பது சம்பந்தமாக பேசி பின்னர் அவரிடமிருந்து பத்திரப்பதிவு கட்டணம் மற்றும் GST போன்ற காரணங்களை கூறி ரூ. 94.000/- பணத்தை அபகரித்துள்ளனர். அதே மாதத்தில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவருக்கு தாங்கள் சொந்தமாக தொழில் தொடங்க ஆன்லைன் முதலீடு என்று கூறி வாட்ஸ் அப் செயலி மூலம் தொடர்பு கொண்டு சந்தோஷ் குமார் என்பவருக்கு ஆசை வார்த்தைகளை கூறி அவரை மூளைச் சலவை செய்து ரூ. 15.000/- பணத்தை அபகரித்துள்ளனர்
மேற்படி ஆன்லைன் மூலம் மோசடி செய்து பணத்தை பறி கொடுத்த கும்பலின் மீது புகாரினை கொடுத்ததின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மதிவாணன் தலைமை கொண்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ரஜினி குமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட குழு புகாரின் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து மீட்ட ரூ. 2.08.840/- பணத்தை மீட்டு பாதிக்கப்பட்ட புகார்தாரர்களுக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மதிவாணன் நேரில் வரவழைத்து உரியவர்களிடம் பணத்தை ஒப்படைத்தார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.
No comments