பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் ஆலயத்தில் தங்கத்தேர் இழுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.
அந்த வகையில், புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் வடிவேலு ஏற்பாட்டில், பிரசித்தி பெற்ற மணக்குல விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பாளர் கணபதி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விழாவில் மாநில அமைப்பாளர் கணபதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சிகளில் மாநிலம் மற்றும் தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments