பாட்டாளி மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவமணியின் மூன்றாவது நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மறைந்த காரைக்கால் மாவட்ட செயலாளர் தைவமணியின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருஉருவ படத்திற்கு மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் வடிவேல், வன்னியர் சங்க தலைவர் மதியழகன், ஆலோசகர் ஜெயபாலன் , வன்னியர் சங்க செயலாளர் திருமலை படையாட்சி , நாகப்பன், மாநில பொருளாளர் நரசிம்மன், நகர தலைவர் தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைப்பாளர் கோபி ,முன்னாள் இளைஞர் சங்க செயலாளர் ரமேஷ் தொழிற்சங்க மாநில தலைவர் கிருஷ்ணன் தேவன் ,ஊடக பேரவை மாநில செயலாளர் செல்வம், இளைஞர் சங்க செயலாளர்கள் சேதுபதி, பிரதீப், ஹேமச்சந்திரன்உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகரத் தலைவர் தமிழ்ச்செல்வன்,நகர துணை தலைவர் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments