நவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி கரையில் புகழ்பெற்ற விஸ்வநாதர் ஆலயத்தில் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்து திரளான பெண்கள் வழிபாடு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காசிக்கு இணையான இடமாகும். இங்கு காவிரி கரையில் ஏழு இடங்களில் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அதில் ஒன்றான துலா கட்டம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு கொலு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி ஒன்பது நாட்களும் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை பெண்களால் செய்யப்படுகிறது. இன்று ஆலயத்தில் அமைந்துள்ள விசாலாட்சி சன்னதியில் ஆலய அர்ச்சகர் சுரேஷ் அம்மனின் 1008 நாமாவளி ஒன்று ஒன்றாக சொல்ல அதனைத் தொடர்ந்து பெண்கள் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
No comments