மகாளய அமாவாசை தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
புதுச்சேரி காந்தி சிலை அருகே மக்கள் தர்ப்பணம் கெடுக்கும் காட்சி |
அமாவாசை நாள்களில் முன்னோர்களை நினைத்து விரதம் இருப்பது வழக்கம். அதில் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவற்றில் மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை முக்கிய இடம் வகிக்கிறது.
அந்த வகையில்,மகாளய அமாவாசையான இன்று புதுச்சேரி கடற்கரை, உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் மற்றும் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் அதிகாலை முதல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சங்கராபரணி ஆற்றில் நீராடி, கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
No comments