Breaking News

திமுக விளையாட்டு அணி சார்பில் மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா துவக்கி வைத்தார் !





 பிரெஞ்சு மக்களின் விளையாட்டான பெத்தாங் விளையாட்டு என்பது புதுச்சேரியின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றாகும். இது பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் புதுச்சேரியின் விளையாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் புதுச்சேரி மாநில திமுக விளையாட்டு மேம்பட்டு அணி சார்பில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திமுக பவள விழாவையொட்டி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் எமிலன் ஏற்பாட்டின்பேரில், பி.எல்.டி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 16 ம் ஆண்டு மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டி உழவர்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கியது. 



பி.எல்.டி தலைவர் அருமை செல்வம் முன்னிலையில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளருமான இரா. சிவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்து, தானும் பெத்தாங் விளையாடினார். 

மூன்று நாட்கள் நடைபெறும் பெத்தாங் போட்டியில் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 41 கிளப்புகளை சேர்ந்த 307 அணிகள் கலந்துகொள்கின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று அணிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட உள்ளது.

துவக்க நிகழ்ச்சியில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ். கோபால், வே. கார்த்திகேயன், தொகுதி செயலாளர்கள் கலியகார்த்திகேயன், இரா. சக்திவேல், மாணவரணி துணை அமைப்பாளர் அமுதன், சட்ட ஆலோசகர் பிரகாஷ் மற்றும் பி.எல்.டி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் புரோஸ்பேர், பொருளாளர் சூசைராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments

Copying is disabled on this page!