Breaking News

வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மர்மமான முறையில் கொலை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா நேரில் விசாரணை.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சந்திராபாய்(75). இவருடைய கணவர் விஸ்வநாத ராவ். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள், இருக்கும் நிலையில் கணவர் விஸ்வநாத ராவ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து மகன் தனியாகவும், மகள் ஆந்திரா மாநிலம் இந்துபூரில் கணவருடன் வசித்து வருகிறார். மூதாட்டி ராஜபாளையத்தில் உள்ள மகளின் வீட்டில் தனியாக இருந்து கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

மகள் தன்னுடைய தாய்யிடம் இரவு மற்றும் காலை நேரத்தில் பேசுவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை தன்னுடைய தாய்க்கு போன் செய்தபோது வெகுநேரம் செல்போன் அடித்துக்கொண்டு இருந்தது. போன் எடுக்காததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தன்னுடைய தாய் போன் எடுக்கவில்லை, சற்று பாருங்கள் என்று கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் சந்திராபாய் வீட்டிற்க்கு சென்று பார்த்த போது வீடு திறந்த நிலையிலும், மூதாட்டி ஆடைகள் கலைந்து, இரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து மூதாட்டி உறவினர்கள் ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் ஆலங்காயம் போலீசார் மற்றும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருவண்ணாமலை பகுதியில் இருந்து வீரா என்ற மோப்ப நாய், மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை தீவிரபிபடுத்தியுள்ளனர். 

No comments

Copying is disabled on this page!